Thursday, October 11, 2007

இந்திய விஞ்ஞானிகளின் அறிவியல் மோசடி!!!!!

சுவீ டன் நாட்டு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் முடிவுகளை நம் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். முனைவர். செல்லத்துரை உட்பட நான்கு பேர் சேர்ந்து ஒரு மாற்றமும் இல்லாமல் (ஈ - அடிச்சாங் காப்பினு சொல்லுவாங்களே!!!) வேறு ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

இதில் சம்மந்தப்பட்டவர்களின் விபரம் :

1. கே. முத்துக்குமரன், அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை
2. ரோசன் பொகலவலெ , ஒக்லகோமா பல்கலைக் கழகம், நார்மன் ஐக்கிய அமெரிக்க நாடுகள்
3. டாம் மத்யுச் , இந்திரா காந்தி அணுமின் நிலையம், கல்பாக்கம்
4. செ. செல்லத்துரை, அண்ணா பல்கலைக் கழகம் , சென்னை


தலைப்பிலும் கட்டுரையிலும் சிறிய மாற்றமே செய்யப்பட்டுள்ளது. இதை அந்த பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அதை பார்த்த அதன் உண்மையான உரிமையாளர்கள், அந்த பத்திரிக்கையில் புகார் தெரிவித்துள்ளனர்.


மேலும் விவரங்களுக்கு :
http://www.liu.se/en/news-and-events/News
http://horadecubitus.blogspot.com/2007/10/great-minds-think-alike.html#comment-716259335855921555
http://horadecubitus.blogspot.com/2007/10/translation-of-swedish-article-on.html


நேர்மை என்பது எல்லா விடயங்கலிலும் தேவையே!!

இப்படி அச்சு அசல் ஒத்திருக்கும் மோசடியை என்ன சொல்வது!!!




6 பின்னூட்டங்கள்:

said...

ஆமாம், சர்தான் போங்க!

எங்க வேத வாந்திகிட்ட சொல்லி சுவீடனையே ஒரு இந்திய மாநிலமா மாத்திட்டா, சுவீடன் கண்டுபிடிப்பும் இந்தியாவுதா ஆயிடும்ல?

இப்ப என்ன செய்வீங்க?

டமுக்க டப்பான் டையோலோ!

;-D

said...

It is common in indian science field.

said...

this is not "stealing of knowledge" (that is my translation for 'ariviyal mosadi')
this is just plain cheating (MOLLAI MARI THANAM)
a disgrace...
every now and then only indians' name pop up like this kind of cheating.

said...

//எங்க வேத வாந்திகிட்ட சொல்லி சுவீடனையே ஒரு இந்திய மாநிலமா மாத்திட்டா, சுவீடன் கண்டுபிடிப்பும் இந்தியாவுதா ஆயிடும்ல//

இப்பதிவிக்கும் வேத வாந்திக்கும் என்ன சம்பந்தம்... ஒன்னும் புரியலையே...

said...

இந்நிகழ்வு, அறிவியலில் நிகழ்ந்த தனிநபர் மோசடி என்கின்ற கண்ணோட்டத்தில், இது தவறு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

இக்கட்டுரையில் இணையாசிரியராக இருவேறு சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்,ஆதலால்,
இந்நிகழ்வு ஒரு தனிநபர் மோசடி என்கின்ற கண்ணோட்டத்தைத் தாண்டி இந்திய அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடையே அறிவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும்போது கடைபிடிக்கவேண்டிய சர்வதேச நெறிகள் பற்றிய அறிவின் தரவெளிப்பாடாகவே கொள்ளவேண்டும்.
இந்தியாவின் அனைத்து ஆராய்ச்சி மையங்களும், பல்கலைக்கழகங்களும் அந்நெறிகளை தங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பயிற்சிப்பாடமாக வைப்பதோடல்லாமல், அவை பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் அவ்வப்போது கண்காணிக்கவேண்டியது அந்நிறுவனங்களின் தலையாய கடமையாகக் கருதப்படவேண்டும்.

said...

இந்தப்பதிவைப்போட்டவங்களுக்கு இந்தியாவின் நாட்டு நடப்பு எதுவுமே தெரியாது போல இருக்கே!

இந்தியாவில் பல்கலையில் ஆய்வுப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், அவர்களது ஆய்வு சம்பந்தமாக ஏதாவது சமர்ப்பித்தால் அவர்களது வழிக்காட்டிகளையே அவர்கள் சமர்ப்பின் இணை ஆசிரியர்களாகப்போட்டுக்கொள்வார்கள்,அப்போது அப்போ தான் வழிக்காட்டி மனசு குளிரும்! எளிதாக ஆய்வு பட்டம் வாங்கலாம்.

இந்த ஆய்வுக்கட்டுரை விஷயம் கூட அப்படித்தான் நடந்து இருக்க வேண்டும். ஆய்வு மாணவர்கள் இப்படி இணையம், பல புத்தகங்கள் என சுட்டு எழுதியக்கட்டுரைக்கு அதன் மூலம் தெரியாமலே ஒப்புதல் தந்தவர்கள், ஏற்கனவே ஆய்வு முடித்தவர்கள், பேராசிரியர்களாக வேலைப்பார்ப்பவர்கள்,
(according to the bibiliography of research papers phd scholars name appears first)

ஆய்வுமாணவர்கள் , அப்படிப்பட்டவர்களின் பெயருடன் ஆய்வுக்கட்டுரை என அறிவியல் பத்திரிகைக்களுக்கு அனுப்பிவிடுவார்கள்.மாட்டினால் எல்லாம் தான் மாட்ட நேரிடும் ஆனால் ஏற்கனவே ஆய்வு முடித்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தான் அதிகம் அடிப்படுவார்கள்! குற்றம் சாட்டும் போது அவர்கள் மீது சாட்டினால் தானே கவனத்தை கவரும்.

மேலும் ஆய்வுமாணவர்களின் கட்டுரையின் சிலப்பாகங்களை மட்டும் தொகுத்து தனி ஒரு கட்டுரையாக அறிவியல்பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் பேராசிரியர்களும் இருக்கிறார்கள்! இது அப்படியும் நடந்து இருக்கலாம்!

link to web designers design guide
Get a free hit counter today.