ஐன்ச்டீன் (ஐன்ஸ்டீன்) கடவுளைப் பற்றி என்ன சொல்கிறார்?
அல்பர்ட் ஐன்ச்டீன், இவர் தனது படைப்புகளின் மூலம், அறிவியலில் பெரும் திருப்பங்களை ஏற்ப்படுத்தியவர். இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான மனிதர்களுள் ஒருவர். 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவரைப் பற்றிய இந்த (அட்டைப் படம் - மேலே பார்க்க) புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது,
ரொம்ப வித்தியாசமான மனிதராகவே இருந்திருக்கிறார். தனக்கு வரும் கடிதங்களுக்கு பதில் அளிக்கும் பழக்கமுடையவராக இருந்திருக்கிறார்.
அப்படி ஒரு கடிதமும் அதன் பதிலும் இங்கே:
ஒரு பள்ளி மாணவி தன் கடிதத்தில் கேட்ட கேள்வி: "விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்வார்களா? செய்தால் என்ன வேண்டிக் கொள்வார்கள்?"
ஐன்ச்டீன் சொல்கிறார்:
என்னுடைய பதிலை என்னால் இயன்ற அளவு எளிமையாகத் தர முயற்சித்திருக்கிறேன். இது தான் என் பதில்:
இயற்கையின் விதிகளின் படி தான் ஒவ்வொரு செயலும் நடக்கும் என்ற எண்ணமே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஆகவே, இந்த விதி மனிதர்களின் செயல்களுக்கும் பொருந்தும். இந்தக் காரணத்தினாலேயே, செயல்களின் நிகழ்வை பிரார்த்தனை பாதிக்கும் (அ) மற்றும் என்ற கூற்றின் மீது, ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி நம்பிக்கை வைப்பது மிகவும் அரிதே!! அதாவது, மனிதனுக்கு அப்பாற்பட்ட (கடவுள் என்று சொல்கிற) ஒன்றிற்கு வைக்கும் கோரிக்கை (வேண்டுதல்/ பிரார்த்தனை) மூலம் செயல்களின் நிகழ்வை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வாய்ப்பில்லை!
இந்தபடியான இயற்கை விதிகளைப் பற்றிய நமது அறிவு, முழுமையற்றதாகவும், கோர்வையற்றதாகவுமே உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், அனைத்து நிகழ்வுகளையும் விளக்கக்கூடிய இந்த விதிகளின் இருப்பை நம்புவதும் ஒருவித நம்பிக்கையே! ஆனால், இந்த நம்பிக்கை, விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் பெரிதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், இயற்கையின் இந்த விதிகளில் ஒரு சக்தி இருப்பது, அறிவியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே! இந்த சக்தியானது, மனிதனின் ஆற்றலை விட மிக மேன்மையும் பலமும் வாய்ந்தது. இதன் முன், மனிதன் தன் அளவான சக்திகளுடன் மிக எளியவனாகவே உணரவேண்டும். இந்த வகையில் பார்த்தால், அறிவியலில் ஈடுபட்டிருப்பதுவும் ஒரு மதத்தைப் பின்பற்றுவது போல ஒரு உணர்ச்சியை ஏற்ப்படுத்தும், இந்த மதமானது ஒரு அறிவியல் அறியாத/சாராத மனிதனின் மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதே!!!
இந்தக் கருத்துக்களை அறிவியல் சார்ந்தவளாக, நான் ஏற்றுக்கொள்கிறேன். பள்ளிப் பருவம் முதல் பயிலும் அறிவியலின் மீது நம்பிக்கை இருக்கும் போது கடவுளையும் நம்பமுடியுமா?
உங்களின் கருத்துக்களைப் பதியுங்களேன்!
15 பின்னூட்டங்கள்:
எல்லா நிகழ்வுகளுக்கும் பின்புலம் தெரிந்துவிட்டால் இந்த கடவுள் சமாச்சாரமும் வெட்ட வெளிச்சமாகிவிடும்.அது இப்போது தெரிகிற மாதிரியில்லை.. atleast எனக்காவது.
மனிதனால் படைக்கப்பட்ட கடவுளை நம்புவதை விட, மனிதனால் "கண்டுபிடிக்கப்பட்ட" அறிவியலை ஏற்றுக் கொள்ளலாம். கடவுள் இருக்கிறார் என்று சொல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளை விட, இல்லை என்று நம்பும்பொழுது பிரச்சினைகள் குறைவு
// இயற்கையின் இந்த விதிகளில் ஒரு சக்தி இருப்பது, அறிவியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே! இந்த சக்தியானது, மனிதனின் ஆற்றலை விட மிக மேன்மையும் பலமும் வாய்ந்தது. //
உலகமே பார்த்து வியக்கும் 20 ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞரான ஐன்ஸ்டீன் கடவுளைப்பற்றி இவ்வாறு கூறியிருப்பது அதிசயமாக உள்ளது.
உங்களுடன் நானும் அவரின் இந்தக் கூற்றுடன் முற்றிலும் உடன்படுகிறேன்.
அதிலும் அவர்,
//இதன் முன், மனிதன் தன் அளவான சக்திகளுடன் மிக எளியவனாகவே உணரவேண்டும்//
என்று கூறியிருப்பது, இன்றைய பகுத்தறிவாளர்கள் என்ற பெயரில் கடவுள் நம்பிக்கையை அல்லது இறை அச்சத்தை கேலி செய்யும் அனைவரும் உற்று நோக்க வேண்டிய ஒரு விடயமென்றே நான் கருதுகின்றேன்.
வாங்க! வருவூர் குமார்,
//எல்லா நிகழ்வுகளுக்கும் பின்புலம் தெரிந்துவிட்டால் இந்த கடவுள் சமாச்சாரமும் வெட்ட வெளிச்சமாகிவிடும்//
தெரிய முற்பட்டால் தான் தெரிந்துகொள்ளமுடியும்.
--------------
வாங்க! வினையூக்கி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கு நன்றி!
--------------------
வாங்க! நவன், வருகைக்கு நன்றி!
உங்கள் கருத்து, பதிவை நீங்கள் முழுமையாக படிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது!!
//இந்த மதமானது ஒரு அறிவியல் அறியாத/சாராத மனிதனின் மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதே!!!// - இதை நீங்கள் படிக்கவிலையா??
கடவுள் நம்பிக்கை அவருக்கு இல்லை என்பதை அவர் பல இடங்களில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
இத பிரப்பஞ்சதின் இயக்கத்தை பார்க்கும் போது நமக்கும் மேலான ஒரு பவர் இருக்குனு சொன்னவரும் இவர்தான் !!!!!
அவருடைய புக்கை நல்லா படிச்சா தெரியும்...
இதை பலர் கடவுள் அப்படினு சொல்லுறாங்க
இவரு எதோ ஒரு பவருனு சொல்லுறாரு அவ்வளவே...!!!
கடவுள் இருக்கிறார் என்று சொல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளை விட, இல்லை என்று நம்பும்பொழுது பிரச்சினைகள் குறைவு//
ithu nalla irukku, vinaiyooki.
அவருடைய வார்த்தைகள் ஆழ்ந்த கருத்துச் செறிவு மிக்கவை. அதன் பின் புலத்தில் உள்ள புரிதலை அறிவியல் சார்ந்தவர்களே உணர்வது சற்று கடினமான செயல்.
அவருடைய கடிதத்தின் ஆங்கில வடிவத்தையும் இணைத்தே பதித்திருக்கலாம். இது உங்கள் மொழிபெயர்ப்பில் உள்ள நம்பிக்கையிண்மையால் கூறப்படும் கருத்தல்ல.
இத பிரப்பஞ்சதின் இயக்கத்தை பார்க்கும் போது நமக்கும் மேலான ஒரு பவர் இருக்குனு சொன்னவரும் இவர்தான் !!!!!
அவருடைய புக்கை நல்லா படிச்சா தெரியும்...
இதை பலர் கடவுள் அப்படினு சொல்லுறாங்க
இவரு எதோ ஒரு பவருனு சொல்லுறாரு அவ்வளவே...!!!
தோழர் சும்மா அதிருதுல்ல!
உங்கள் வாதம் ஏற்புடையது அல்ல.அவர் குறிப்பிட்ட சக்தி புவி ஈர்ப்பு சக்தி என்பதையும், அவர் தான் சொல்லி இருக்கிறார். அவர் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்.
அறிவியல் வளர்ச்சிக்குக் கடவுளும்,மதங்களும் பெரிய தடைக் கற்களாக இருந்துள்ளன,இன்றும் இருக்கின்றன!
நிலவைக் கடவுளாக வணங்குபவன் நிலவைப் பற்றி என்ன கண்டு பிடித்திருப்பான்.
செவ்வாய்க் கிரகதோசம் பார்ப்போர் செவ்வாய் பற்றித் தெரிந்திருந்தும் நம்புவது பக்தியா?மடமையா?
பல அறிஞர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்,நோபல் பரிசு புகழ் சந்திரசேகர் கூட.
பகுத்தறிவுவாதிகள் துணிவுடன் கேள்விகள் கேட்பவர்கள்.அவர்களது கண்டு பிடிப்புக்கள் பல மக்களனைவர்க்கும்,மதத்தலைவர்
கட்கும் உதவியுள்ளன!
//தருமி said...
கடவுள் இருக்கிறார் என்று சொல்லும்போது ஏற்படும் பிரச்சினைகளை விட, இல்லை என்று நம்பும்பொழுது பிரச்சினைகள் குறைவு//
ithu nalla irukku, vinaiyooki //
நன்றி தருமி சார்.
---
எண்ணப்பறவை,
இந்த விடயத்தை பகிர்தலுக்கு நன்றி. போன பின்னூட்டத்தில் நன்றி சொல்ல தவறிவிட்டேன்
அன்புடன்
வினையூக்கி
www.vinaiooki.com
வாங்க தருமி, கையேடு, தமிழச்சி, தமிழன் -
வருகைகும் கருத்துக்களுக்கும் நன்றி.
வாங்க சும்மா அதிருதுல!
//இதை பலர் கடவுள் அப்படினு சொல்லுறாங்க
இவரு எதோ ஒரு பவருனு சொல்லுறாரு அவ்வளவே...!!//
எதோ ஒரு பவருனு சொல்லலைங்க! தெளிவா இயற்க்கையின் விதிகளின் சக்தினு சொல்லியிருக்காரு.
கடவுளுங்கறதுக்கும் , இந்த சக்திக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
அவர் சொல்ல வந்த சக்தி வேற ஒன்னும் இல்லீங்க, பருப்பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு மற்றும் எதிர்ப்பு விசைகளையே! இந்த விசைகளே இப்பிரபஞ்சத்தின அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிப்படையானது என்பது அறிவியலார் அறிந்த உண்மை.
கையேடு அவர்களே!
கருத்திற்கு நன்றி!. நேரம் கிடைத்தால் ஆங்கிலத்தில் தர முறச்சிக்குறேன்.
நன்றி.
//அதாவது, மனிதனுக்கு அப்பாற்பட்ட (கடவுள் என்று சொல்கிற) ஒன்றிற்கு வைக்கும் கோரிக்கை (வேண்டுதல்/ பிரார்த்தனை) மூலம் செயல்களின் நிகழ்வை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஒரு விஞ்ஞானிக்கு இருக்க வாய்ப்பில்லை//
மன்னிக்கவும். இந்த பதிவை மறுபடியும் ஒருமுறை படித்துப் பார்த்ததில் ஐன்ஸ்டீனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை மேலேயுள்ள ஒரேயொரு மேற்கோள் மாத்திரமே(அவரும் ஒரு விஞ்ஞானி என்ற வகையில்)ஒரளவு தெரியப் படுத்துகின்றது.
கடவுள் என்ற பதத்துக்கு உரிய வரைவிலக்கணமாக உங்களுடைய
இப் பதிவிலுள்ள விளக்கம் அமையாவிட்டாலும்,
//இதன் முன், மனிதன் தன் அளவான சக்திகளுடன் மிக எளியவனாகவே உணரவேண்டும். இந்த வகையில் பார்த்தால், அறிவியலில் ஈடுபட்டிருப்பதுவும் ஒரு மதத்தைப் பின்பற்றுவது போல ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தும்,//
என ஐன்ஸ்டீன் கூறியதாக தாங்கள் தெரியப்படுத்தியதால் தான், கடவுள் நம்பிக்கையுடைய நான் அவ்வாறு கருத்துத் தெரிவித்தேன்.
எனது கருத்தைப் பிரசுரித்தமைக்கு நன்றி!
ஐன்ஸ்டீனைப் பற்றிய உங்களது இந்தப் பதிவு என்னையும் 'ஐன்ஸ்டீனும் கடவுளும்'
என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதத் தூண்டிவிட்டது. அதற்கான முகவரி கீழே,
http://navanulagam.blogspot.com/2007/10/blog-post_10.html
வலைப் பூ முழுவதும் என் உலகம் தான்..
இங்கு நீங்களும் வரவேற்கப் படுகின்றீர்கள்..
Post a Comment