பெரியாரும் பாரதியாரும்.....
திரு.ஞானசேகரன் இயக்கத்தில் வெளிவந்த 'பெரியார்' படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி நிறைய பதிவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். என்னைப் பொறுத்தவரை அந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் பெரியாரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதுவரைக்கும் ஏதோ வைக்கம் வீரர், தி.க என்றக் கட்சியைத் தோற்றுவித்தவர், கடவுள் இல்லை என்று சொன்னவர் என்ற அளவில் மட்டுமே தெரியும்.
படத்தைப் பார்த்ததிலிருந்து என் மனதில் ஒரே கேள்வி! பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். பாரதியாரோ 1882-ஆம் ஆண்டு பிறந்து 1921-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்தானே? இவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்திருந்தார்களா? இவர்கள் சந்தித்திருக்கிறார்களா? இவைகளை தவிறவும் இன்னோரு கேள்வி பாரதியாரைப் பற்றி நான் கேள்விப்பட்ட அளவிற்கு பெரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே என்பது தான்.
படத்தைப் பார்த்ததுக்குப் பிறகு பெரியாரைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் அவரைப் பற்றி படித்தேன். அதில் 'தமிழச்சி' எழுதும் பதிவுகள் ரொம்பவே உபயோகமா இருந்திச்சு.
நான் தெரிந்துக்கொண்ட அளவில், பெரியாரும் சாதிகள் ஒழிய வேண்டும் என்று பாடுபட்டார். எல்லா சாதியிலும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடின்றிப் பெண்கள் மிக இழிவாகவே நடத்தப்படுகிறார்கள் என்று சாடினார். சாடுதலோடு நின்றுவிடாமல் போராட்டம் செய்து அவை சட்டமாகும் அளவிற்கு காரணமாகவும் இருந்திருக்கிறார். உதாரணத்திற்கு பொட்டுக்கட்டுதல் என்ற வழக்கத்தை களைந்ததைச் சொல்லலாம்.
பாரதியாரும் இவ்வாறே தான் கூறுகிறார். உதாரணத்திற்கு "சாதிகள் இல்லையடிப் பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ..." பெண்கள் இழிவைப் பற்றி : "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்பன.
விடயங்கள் இப்படியிருக்க, பாரதியாரைப் பற்றி தெரிந்த அளவிற்கு பெரியாரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. இதற்கு என்னுடைய பொது அறிவைக் குறை சொன்னாலும், என் பள்ளிப் பருவம் தொடங்கி இந்தப் படம் பார்க்கும் வரையில் என் ஆசிரியர்கள் மூலமோ அல்லது பொதுப்பேச்சாளர்கள் மூலமோ அல்லது ஊடகங்கள் மூலமோ நான் அவரைப் பற்றி அறிந்ததில்லை. ஒரிரு முறை என் தந்தையிடமிருந்து தி.க-காரர்கள் அப்படிச் செய்தார்கள், இப்படிச் செய்தார்கள் என்று அவர்களைப் பற்றி குறை மட்டும் கேட்டிருக்கின்றேன் அவ்வளவே!!!!
சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் இருவரிடையே இருந்த மிகப் பெரிய வேறுபாடு ஒன்றுதான். அது கடவுள் நம்பிக்கையே!! இதற்கும் நான் பெரியாரப் பற்றி அறியாதிருந்ததர்க்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறிர்கள்? இது தான் காரணமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
2 பின்னூட்டங்கள்:
ஐயா நீங்கள் கூருவது முற்றிலும் உண்மையே... பாரதியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர், மூட பழக்க வழக்கங்களை தவிர்கக பாடுபட்டார். தந்தை பெரியார், கடவுள் நம்பிக்கையால்தான் இவ்வளவு பிரச்சனை என்று போரடினார்.. அப்பொழுது உணராத மக்கள் இன்றும் மூட நம்பிக்கைகளை புதிய சந்ததியினரிடையெ வளர்த்து கொண்டுதான் போகிரர்கள். பெரியார், பாரதியார் போன்ரோர் வாழ்ந்த போதுதன் அவர்களை மதிக்கவில்லை, அவர்களது திரைபடங்களை பார்தாவது சற்று தெளிவடைவோம்.
அப்படி கடவுள் நம்பிக்கை மட்டும் தான் ஒரே காரணம்னு சொல்றதுக்கில்லீங்க.. பாரதியாருக்காக எத்தனை சட்ட திருத்தம் வந்திருக்கும்னு நினைக்கிறீங்க? ஆனா பெரியார் சட்டங்களைத் திருத்த காரணமா இருந்திருக்கார்..
கலகக்காரர்களைப் பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்துவதில்லை.. ஆர்வம் தான் காட்டிக் கொடுக்கும்..
Post a Comment