தமிழ் எழுத்து!
தமிழில் எழுதுவது என்னைப் பொருத்த வரையில் பன்னிரெண்டாம் வகுப்போடு நின்றுவிட்டது. ஆனால் தமிழில் எழுதுவது எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று.
நான் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தப்போ, தமிழ் பாடம் அவ்வளவாக பிடிக்காது (247 எழுத்துக்கள் பாருங்க!!!, இதுவே ஆங்கிலம்னா 26 தானே!!). அப்புறம், வளர, வளர தமிழ் எனக்கு பிடித்த பாடங்களில் ஒன்னா ஆயிருச்சு. வீட்டுல படிக்கச் சொன்னா எப்பவும் தமிழ் புத்தகத்தோட தான் இருப்பேன். இந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் வர காரணம் என் தமிழாசிரியர்கள் என்றே நினைக்கிறேன். நேரம் போவது தெரியாமல் ஒரு மணிநேர வகுப்பு முழூவதும், ஒன்று அல்லது இரண்டு திருக்குறள்களுக்கு விளக்கம் சொன்ன காலமும் உண்டு. அதேசமயம், பத்தாம் வகுப்பில் செய்யுள் பகுதியில் வரும் கம்பராமாயணத்தின் விளக்கம் ஒரு மாதம் வரை நீடித்தது. கம்பராமாயணத்தில் வரும் அந்த பகுதியாவது: ராமன் வாலி மீது மறைத்திருந்து அம்பு எய்கிறான் - உயிர் போகும் நிலையில் வாலி கூறுவதுதான் அந்த பகுதி. அப்போது, கம்பராமாயணத்திற்கு "இச்டிக்கர்ராமாயணம்", "சவ்வுராமாயணம்" என்றெல்லாம் பட்டப்பெயர்.
கல்லூரி நாட்கள்ல, தமிழ் படிக்க அவசியம் குறைந்துபோனது (அது ஒரு பாடமா இல்லீங்க!!!). அப்புறமென்ன, அவ்வப்போது குமுதம், ஆனந்த விகிடன், .... படிப்பதோடு சரி.
இப்போ கொஞ்சநாளா, தமிழ்ப்பதிவுகள் நிறைய படிக்கப்போயி, பதிவர்கள் உதவியால கனிணியில் தமிழ் எழுதுவது சுலபம்னு தெரியப்போயி, அதை சோதனை செய்துபாத்து, வெற்றியடையப்போயி, நம்மழும் எழுதலாமேன்னு நினைகப்போயி, .............
ஒருவழியா எழுத ஆரம்பித்திட்டேன் :-)
3 பின்னூட்டங்கள்:
வாங்க.. வாங்க...
நல்லாவே ஆரம்பிச்சிருக்கீங்க!!
நிறைய எழுதறதுக்கு வாழ்த்துக்கள்
உடுக்கை முனியாண்டி அவர்களே!
உங்க வருகைக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றிங்க.
கண்டிப்பா நிறைய எழுதறதுக்கு முயற்சி பண்ணுவேன்.
வாழ்த்துக்கள்.. :)
Post a Comment