Sunday, June 10, 2007

பனி முகடு!

சமீபத்தில் கோலராடோ மாநிலம், கோலராடோ இச்பிரிங்ச் (Colarado Springs), என்ற இடத்துக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்த புகைப்படங்களும், என் எண்ணத்தில் தோன்றியவையும், இந்தப் பதிவில்.
______________________________________

கோலராடோ இச்பிரிங்ச், பைக்கிச் முகடு (Pikes Peak) : ஒரு தொடர்வண்டியின் (Pike's Peak Cog railway) மூலம் முகடின் உச்சிவரை போகமுடிந்தது. அதாவது 14,110 அடி வரை. போகிற வழிநெடிகிலும் அற்புதமான காட்சிகள். பனிப்பொழிவு வேறு அத்தனை காட்சிகளையும் இன்னும் அற்புதமாக்கிக் கொண்டிருந்தது.்ட்சொசத

முகடின் அடிவாரத்திலிருந்து கிளம்பும் பொழுது ரொம்ப பனி மூட்டமா இருந்திச்சுங்க, ஆனா உயரம் போக போக வானம் தெளிவாக, நல்ல புகைப்படங்கள் எடுக்க முடிஞ்சுது.

துளித்துளியாய் தெரியும் நீர் தொடர்வண்டியின் கண்ணாடியில் இருந்தது (உள்ளேயிருந்து எடுத்தது பாருங்க!! :-) ).

அப்படியே வானத்துக்குள்ளே போய்விடுவோம் போல தோனிச்சுங்க!!!!
வண்டியில் முதல் வரிசையில் இடம் கிடைத்ததும் படம் எடுக்க வசதியா இருந்திச்சு!



14,110 அடி வரை போனா, அங்க ஒரு உணவகம். நல்ல கொட்டிக்கிட்டு சந்தோசமா கீழே வந்தோம். அப்புறம், பக்கத்தில செவென் பால்ச் (Seven falls) என்ற இடத்துக்கு போனோம், போகறத்துக்கு முன்னாடி, அந்த இடத்தைப் பத்தி நிறைய கேள்விப்பட்டோம். நானும் நிறைய கற்பனையோட போனேன். ்்

அங்க போனப்புறம் தான் தெரிஞ்சுது, அருவி தரையில் வீழ்வதற்கு முன் ஏழு திட்டுக்களில் வீழ்கிறது என்பதினால் தான் அதற்கு செவென் பால்ச, அதாவது ஏழருவி என்று பெயர். நாங்கூட நம்ம குற்றாலம் ஐந்தருவி மாதிரின்னு நினச்சு ஏமாந்திட்டேன்.

மொத்தத்தில், ஒரு இனிய அனுபவமாக இருந்தது பயணம். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க வேண்டிய இடம்.

இந்த இரண்டு இடங்களையும் பற்றி மேலும் விவரங்களுக்கு:

பைக்கிச் முகடு (Pikes Peak)-தொடர்வண்டி: http://www.cograilway.com/
செவென் பால்ச்(Seven falls): http://www.sevenfalls.com/



2 பின்னூட்டங்கள்:

said...

படங்கள் நல்லாவே இருக்கு. எங்களை மாதிரி ஆட்கள் படத்தை சுட்ருவோம்ங்கறதுக்காக ஒவ்வொரு படத்துலயும் உங்க பேரை பொறிச்சி வைச்சிருகீங்க.ம்ம்ம்ம்ம்...

என்னது இது இச்ப்ரிங்க்ச் ன்னு மண்டைய உடைச்சிக்கிட்டேன். கடைசியில தான அது ஸ்பிரிங்ஸ்ன்னு தெரிஞ்சது.

நிறைய எழுதுங்க. நேரம் கிடைச்சா!!!!

said...

வருகைக்கு நன்றி!

படத்துலே எப்படி பெயர் பொறிக்கிறதுங்கிறதை கத்துக்கிட்டேன், அதை சோதித்தேன் அவ்வளவுதான்.

"இச்ப்ரிங்க்ச" - வடமொழி எழுத்துக்கள் கலக்காம எழுதனுங்கற முயற்சியில அப்படி எழுதிட்டேன். சிரமத்துக்கு வருத்தங்கள் :-(

link to web designers design guide
Get a free hit counter today.