அம்மா ......
அம்மா . . . . . .
வலிகள் பல தாங்கி என்னை இந்த உலகிற்குத் தந்தாய்
கைப்பிடித்து நடக்கக் கற்றுக்கொடுத்தாய்
படிப்புத்தான் எல்லாம் என்றாய்
உன் வசதிக்கு அதிகமாகவே நல்ல பள்ளியில் பயில வைத்தாய்
என் சந்தோசங்களில் என்னுடன் சிரித்தாய்
என் சங்கடங்களில் என்னுடன் அழுதாய்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இறைவன் இருக்கிறான்-
கவலைப்படாதே உன்னைக் கைவிடமாட்டான் என்றாய்
அப்படித்தான் எண்ணியிருந்தேன் நானும்
அப்படித்தான் எண்ணியிருந்தேன் நானும் !!!!
பறந்து வந்து வெளியிடம் பார்த்துவிட்டேன்
நிறைய மனிதர்களுடன் பழகி மனங்களைத் தெரிந்து விட்டேன்
புரிந்தது உலகம் மெல்ல.. உன்னையும் புரிந்தது !
உன்னையும் புரிந்தது !
அம்மா ...
நீ அறியாமை பெருங்குழியில் இருக்கிறாய்!
உன்னை பகுத்தறிவுக் கயிரிட்டு வெளிச்சத்தில் கொண்டுவரத் தவிக்கிறேன் !!
நீயோ, என்னை அலச்சியப்படுத்திவிட்டு ....
உன் பேத்தியை அந்த இருட்டுக்குள் இழுக்க அரும்பாடுபட்டுக் கொண்டுருக்கிறாய் !!!
அய்யகோ! என் செய்வேன் நான் !!!!!